செல்போனில் பேசும் பெண்களைக் குறி வைத்து நகை பறித்த கும்பல் கைது.. நகைகள் பறிமுதல்
சென்னை: சென்னை புறநகரான தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெண்களைக் குறி வைத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கும்பலைப் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் திருடிய நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வழிப்பறிக் கொள்ளைகள் சர்வ சாதாரணம். அதிகாலையில்,இரவில், தனியாக நடக்கும்போது என திருடர்கள் வழிப்பறிகளில் சர்வ சுதந்திரமாக நடந்துவருகிறார்கள்.

இந்த நிலையில் தாம்பரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செல்போனில் பேசியபடி நடந்து செல்லும் பெண்கள், தனியாக செல்லும் பெண்கள் உள்ளிட்டோரை மட்டும் குறி வைத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட ஒரு கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தக் கும்பலிடமிருந்து திருடப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நகைகள் மீட்பு குறித்து இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் விளக்கினர். மீட்கப்பட்ட நகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications