அலங்காநல்லூரில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை சிறைபிடித்த காவல்துறையினர்!!
அலங்காநல்லூரில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக கூறி அவர்கள் காளைகளை இழுத்துச் சென்றனர்.
மதுரை: அலங்காநல்லூரில் தடையை மீறி காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த காவல்துறையினர் காளைகளையும் சிறைப்பிடித்தனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கறுப்பு கொடியேந்தி பிரமாண்ட பேரணி நடத்தினர். அப்போது தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற இளைஞர்கள காளைகளை கட்டவிழ்த்து விட்டனர்.

இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மடக்கிப்பிடித்த போலீசார் அவற்றை சிறைபிடித்து சென்றனர்.
Madurai (Tamil Nadu): Villagers protest in support of #jallikattu in Alanganallur, lathicharged by Police. Bull seized by Police pic.twitter.com/CZyEVxorQK
— ANI (@ANI_news) January 16, 2017
காவல்துறையினர் நடத்திய திடீர் தடியடியால் போராட்டம் நடத்திய இளைஞர்கள் நாலாபுறமும் சிதறியோடினர். இதனால் அலங்காநல்லூர் பகுதியே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.












Click it and Unblock the Notifications