சுவாதி கொலை வழக்கில் புதிய திருப்பம்.. நண்பரிடம் போலீசார் தீவிர விசாரணை !
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அவரின் நண்பரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி. இன்போசிஸ் ஐடி நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜீனியராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், அந்த வழக்கு சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது.இந்த கொலையை செய்த மர்ம நபர் யார் என, போலீசார் 8 தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். மேலும், பெங்களூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சூளைமேடு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுவாதியின் ஆண் நண்பர்கள் இருவரிடம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது கொலையாளியின் படத்தை காண்பித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர் விசாரணை குழுவினரிடம் காவல் ஆணையர் ராஜேந்திரன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த கொலை குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளில் கொலையாளி என சந்தேதிக்கப்படுபவரின் உருவம் தெளிவாக தெரியவில்லை என்பதால், அந்த உருவத்தின் அடிப்படையில், உருவ படம் வரைந்து ஊடகங்கள் மூலமாக அதை வெளியிட்டு, மக்களின் உதவியை நாட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications