கூவத்தூரில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருப்பதால் பதற்றம்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அங்கு போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட் பகுதியில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி உன தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மூவரும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டுள்ளது.
இதுவரை போயஸ்கார்டனில் தங்கியிருந்த சசிகலா தீர்ப்பு அறிவிப்புக்கு முந்தைய நாளான நேற்றிரவு சென்னைக்கு வெளியே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கினார். அங்கு மன்னார்குடியில் இருந்து இறக்கப்பட்டுள்ள ஏராளமான குண்டர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

ரிசார்ட்டுக்குள் நுழைந்த அதிரடிப்படை
இந்நிலையில் சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினரும் ரிசார்ட் பகுதியில் இறக்கப்பட்டுள்ளனர்.

கூவத்தூரில் பதற்றம்
50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வந்திறங்கிய காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கூவத்தூர் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூவத்தூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மன்னார்குடி கும்பல் பீதி
போலீசார், அதிரடிப்படையினர் குவிப்பால் சசிகலா கைது செய்யப்படுவார் என தகவல் பரவியது. இதனால் மன்னார்குடி கும்பல் பீதியடைந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசியலில் பரபரப்பு
சசிகலாவால் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்களும் அப்புறப்படுத்தப்படவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications