"பிராத்தல் கேஸ் போட்டுருவோம்".. போலீஸ் அடாவடி மிரட்டலால் தற்கொலை.. ரேணுகா பரபர வாக்குமூலம்
Recommended Video

சென்னை: விபசார வழக்கில் கைது செய்து விடுவோம் என போலீஸார் மிரட்டியதால்தான் தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததாக திருவேற்காடு ரேணுகா வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவேற்காட்டை அடுத்த கோலடியில் உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மனைவி ரேணுகா. செவிலியரான இவர் தனது வீட்டின் அருகே கழிவறை கட்டி வந்தார். இதனால் இடதகராறு காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி என்பவருடன் ரேணுகாவுக்கு மீண்டும் சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து அமிர்தவள்ளி அளித்த புகாரின்பேரில் இரு தரப்பினரையும் திருவேற்காடு போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அதிமுக முன்னாள் நகரமன்றத் தலைவர் மகேந்திரன் மற்றும் கவுன்சிலரின் பேச்சை கேட்டு கொண்டு அமிர்தவள்ளிக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.

உரையாடல்
இதனால் மனமுடைந்த ரேணுகா போஸீல் நிலையத்திலேயே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் பேசிய உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில்
இதையடுத்து மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு காவல் நிலையத்திலேயே தீவைத்து கொண்டார் ரேணுகா. இதையடுத்து தீயை அணைத்த போலீஸார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

செல்போனில் பதிவு
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரேணுகா உயிரிழந்தார். இந்நிலையில் போலீஸார் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசுவதால்தான் தான் தற்கொலை செய்து கொண்டதாக இறப்பதற்கு முன் தனது தந்தையுடன் அவர் செல்போனில் பேசிய உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கிவிட்டு மிரட்டல்
அதில் அவர் கூறுகையில் கவுன்சிலர், சேர்மேன் ஆகியோரிடம் ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் பணத்தை வாங்கிக் கொண்டு என்னை மிரட்டினர். மேலும் என்னை பிராத்தல் கேசில் உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்டினர். நான் என்ன விபச்சாரமா செய்கிறேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications