மன அழுத்ததினால் மரத்தில் தூக்குப் போட்டு போலீஸ்காரர் தற்கொலை – மனைவி, மகன், 2 மகள்கள் அதிர்ச்சி!
நாகை: மன அழுத்தம் காரணமாக, நாகை மாவட்டத்தில் காவல்நிலையத்தின் அருகே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரால் அவருடைய மனைவி, பிள்ளைகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அன்னலட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
கரியாப்பட்டிணம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஆறுமுகம், இன்று காலை காவல்நிலையத்தின் பின்னால் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கியப்படி காணப்பட்டார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றினர்.
ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது மனைவி தெரிவித்தபோது, "1994 இல் போலீஸ்காராக பணியில் சேர்ந்தார். இவரது நடவடிக்கை சரியில்லை என்று கூறி சென்னையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்.
99 இல் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கரியாப்பட்டிணம் காவல்நிலையத்தில் பணி செய்யுமாறும், சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடையாது என்று சொல்லிவிட்டனர்.
தன்னுடன் பணியில் சேர்ந்தவர்களும், தனக்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நான் சல்யூட் அடிக்க வேண்டியுள்ளது என்று தினமும் புலம்பிக்கொண்டிருப்பார்.
குழந்தைகளை காப்பற்ற வேண்டும் என்பதால் வேறு வழியில்லை வேலைக்கு செல்லுங்கள் என்று நான் சொல்லி வந்தேன். வேறு காவல்நிலையத்திற்காவது மாற்றுங்கள் என்று மேலதிகாரிகளிடம் கேட்டு வந்தார்.
இந்தநிலையில் மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இனி 3 குழந்தைகளை வைத்து எப்படி வாழப்போகிறேனோ தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications