போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை பலி.. காரணம் என்ன?
தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை இறந்தது. இதற்கான காரணம் குறித்து யாரும் விளக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவரின் மனைவி சுகன்யா, தனது ஒன்றரை வயது மகனுக்கு சொட்டு மருந்து கொடுக்க அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்குச் சென்றார்.
கா்லையில் சொட்டு மருந்து கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் குழந்தை மயக்கமடைந்தது. இதையடுத்து அதே அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு விரைந்தனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படாததால், குழந்தையின் உறவினர்கள், பொதுமக்கள் கூடி திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications