சென்னை மெட்ரோ ரயிலுக்கு உரிமை கொண்டாட கட்சிகளுக்குள் போட்டா போட்டி!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு பச்சைக்கொடி காட்டப்படும் நிலையில், இந்த ரயில் சேவைக்கு பல கட்சிகளும் போட்டி போட்டு உரிமை கொண்டாடி வருகின்றன.
போக்குவரத்து பிரச்சினையை கருத்தில் கொண்டு, சென்னையில் மெட்ரோ ரயில் இயக்க 2008ல் அப்போதைய திமுக அரசு முடிவு செய்து, மத்திய அரசிடம் அனுமதி கோரியது.
2009ல், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்த மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறும் இந்த காலகட்டத்தில், மெட்ரோ ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில், மக்கள் மத்தியில் மெட்ரோ ரயிலுக்கு இருக்கும் வரவேற்பையும், அந்த உற்சாகத்தையும் தங்கள் பக்கம் ஈர்க்க கட்சிகள் போட்டா போட்டி போடுகின்றன.
திமுக தொடங்கிவைத்த திட்டங்களுக்கு ஸ்விட்ச் போட்டு திறந்துவைப்பதும் ஒருவித 'டப்-ஸ-மேஷ்' தான்.
#ChennaiMetroRail #CMRL #Dubsmash
— J Anbazhagan (@JAnbazhagan) June 29, 2015 திமுக ஆதரவு டிவி சேனல்களோ, அந்த கட்சி ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டதை மட்டும் சொல்கின்றன. திமுக நிர்வாகி, ஜே.அன்பழகன், தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக தொடங்கிவைத்த திட்டங்களுக்கு ஸ்விட்ச் போட்டு திறந்துவைப்பதும் ஒருவித 'டப்-ஸ-மேஷ்' தான். என்று குறிப்பிட்டுள்ளார்.
We thank our former PM Dr. MMS & UPA chairperson Smt. Sonia ji for their contributions of #ChennaiMetroRail project. pic.twitter.com/U5V9q3uDWW
— Tamil Nadu Congress (@TN_PCC) June 29, 2015 காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், மன்மோகன்சிங் அரசுதான் திட்டத்துக்கு அங்கீகாரம் கொடுத்ததாக சொல்கிறது. மன்மோகனுக்கும், சோனியா காந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கம்.
ஜெயலலிதா ஆதரவு தொலைக்காட்சி சேனலோ, வழக்கம்போல, ஆளும் கட்சி புகழ்பாடுகிறது. தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு, தங்கள் அரசு வந்தபிறகுதான் திட்டம் வேகம்பிடித்ததாக காண்பித்துக்கொள்கிறது.












Click it and Unblock the Notifications