விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்... வலுவான கையை களமிறக்க முயலும் திமுக- புதுகையில் சூடுபிடிக்கும் அரசியல்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நீக்கப்பட்டது யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ திமுகவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றதாம்.
புதுகையில் நடைபெற்ற இரண்டு பிரிவுகளுக்கு இடையேயான பிரச்சினைக்கு மூலகாரணம் என்று குற்றம் சாட்டப்பட்டவர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இதனால் அதிமுகவினரிடையே புதுக்கோட்டையில் உட்கட்சிப் பூசல் வலுத்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.விஜயபாஸ்கர் நேற்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்கு மாற்றாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பொறுப்பில் விவசாய பிரிவு செயலாளர் பி.கே.வைரமுத்து எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரது நீக்கத்தினை அதிமுகவினரே பட்டாசு வெடித்துக் கொண்டாடிய நிலையில், ஒருவேளை விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் மீண்டும் தேர்தலில் நின்றால் அவரை எதிர்த்து ஒரு வலுவான கரத்தினை ஆட்டத்தில் இறக்கிவிட முடிவு செய்துள்ளதாம் திமுக.
அதில் முதலாவதாக அடிபடுவது குன்றாண்டார்கோவில் ஒன்றிய சேர்மன் ஒருவரின் பெயர்தானாம். குட்டிக் கதை சொல்லியே அமைச்சர் பதவி வாங்கியவரைத் தூக்க என்று கூறி இந்த முறை பலமான அஸ்திரத்தினைப் பிரயோகிக்க உள்ளதாகவும் கட்சிகள் திட்டமிட்டுள்ளது தனிக்கதை.
எனினும், முத்தரையர்களின் ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவே இந்த அரசியல் "ஸ்டண்ட்" என்கின்ற கதையும் புதுகை பகுதிகளில் உலா வந்து கொண்டிருக்கின்றது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications