For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாதிகளை துறந்து தமிழன் என்கிற ஒரே குடையின் கீழ் வர வேண்டும்.. கச்சநத்தம் கொலை குறித்து பாரதிராஜா!

கச்சநத்தம் மோதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மன வேதனை அளிப்பதாக இயக்குநர் பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கச்சநத்தம் மோதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மன வேதனை அளிப்பதாக இயக்குநர் பாரதி ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் இரு பிரிவினர் உள்ளனர். இதில் பெரும்பான்மையாக உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த மே 25-ம் தேதி வெள்ளிக்கிழமை கருப்பணசாமி கோயில் திருவிழாவைக் கொண்டாடினர்.

அப்போது, மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள், கோயில் மரியாதை கொடுப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

3 பேர் கொலை

3 பேர் கொலை

இந்நிலையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் கருத்து

தலைவர்கள் கருத்து

இந்நிலையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் வலியுறுத்தல்

திருமாவளவன் வலியுறுத்தல்

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘கச்சநத்தம் மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை. கச்சநத்தம் பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.‘ இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

சீமான் கருத்து

சீமான் கருத்து

இதுதொடர்பாக பேசிய சீமான், சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினாலும் மாற்றுத்திறனாளியாக வாழும் சூழல் உள்ளது.
சாதியரீதியிலான மோதல்களை தவிர்க்க அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து குழு அமைக்கப்படும் என கூறியுள்ளார்.

பாரதி ராஜா கோரிக்கை

பாரதி ராஜா கோரிக்கை

இயக்குநர் பாரதி ராஜா, கச்சநத்தம் மோதலில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனவேதனை அளிக்கிறது. சாதிகளை துறந்து தமிழன் என்கிற ஒரே குடையின் கீழ் வர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

English summary
Politicians sharing their feelings on Kachanatham conflicts. Three killed in Kachanatham conflicts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X