For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரகளையால் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை 45 நிமிடங்களுக்கு பின்னர் தொடங்கியது

தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் நிலையில் கூச்சல் குழப்பம் நடத்தியதால் வாக்கு எண்ணிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரம் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்- வீடியோ

    சென்னை: ஆர்கே நகர் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் அணியினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை தற்போது மீண்டும் தொடங்கியது.

    ஆர்கே நகர் இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் முதல் சுற்றில் தினகரன் 10,421 வாக்குகளும், அதிமுக 4,521 வாக்குகளும், திமுக 2,383 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    Poll counting stops in the mid if 2nd round

    இதன் மூலம் தினகரன் முன்னிலையில் உள்ளார். இதனிடையே அதிமுக முகவர்களுக்கும் தினகரன் அணி முகவர்களுக்கும் இடையே கூச்சல் குழப்பம் நிலவியது.

    தேர்தல் அலுவலர்களும் தாக்கப்பட்டனர். அதிமுக, தினகரன் அணியினர் மோதலால் மேஜைகள், மைக்குகள், நாற்காலிகளை தூக்கி போட்டு உடைத்தனர். அதிமுகவை சேர்ந்த பெண் ஏஜென்ட் உள்பட 4 பேர் வெளியேற்றப்பட்டனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியுள்ளனர்.

    Poll counting stops in the mid if 2nd round

    இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையமே போர்க்களம் போல் காணப்படுவதால் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது இது போல் ரகளை நடந்துள்ளது.

    சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.

    English summary
    As starting from the poll counting, TTV Dinakaran leading, Now ADMK and TTV factions are involved in word of war, so temporarily polling stops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X