கார் விபத்தில் இளம்பெண் பலி - பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கைதாகி ஜாமீனில் விடுதலை
திருப்பூர்: கார் விபத்தில் இளம்பெண் பலியான சம்பவத்தை தொடர்ந்து காரை ஓட்டி வந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் மீது திருப்பூர் பெருமாநல்லூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழக சட்டசபை துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தனது காரில் பெண் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் ஈரோட்டில் உள்ள மற்றொரு நண்பரின் பிறந்தநாளில் பங்கேற்க சென்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இதில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த சுரேகா என்ற இளம்பெண் பலியானார். 7 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக பிரவீன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரவீன் 120 கி.மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. காரை ஓட்டி வந்த பிரவீனும் பலத்த காயமடைந்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக பிரவீனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரவீன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications