மீண்டும் 'லைம் லைட்'டுக்கு வந்த 'ஒரிஜினல் மதுரை ஸ்டிராங்மேன்' பொன் முத்து... அழகிரியின் பரம வைரி!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியுடன் பல காலமாக கடுமையான பைட் கொடுத்து வரும் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லைம்லைட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இவருக்கு எம். பி சீட் கிடைக்க மு.க.ஸ்டாலினே காரணம் என்று கூறப்படுகிறது. இவரைத்தான் தனது தேனி வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது.
நீண்ட காலமாகவே மதுரையில் அழகிரிக்கு கடும் போட்டியாளராக இருந்து வருபவர் பொன் முத்துராமலிங்கம்.

எம்.ஜி.ஆர். காலத்து ஸ்டிராங் மேன்
எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே மதுரையில் திமுகவைக் கலக்கியவர் பொன் முத்துராமலிங்கம்தான்.

அதிமுகவுக்கு முத்து.. திமுகவுக்கு பொன் முத்து
மதுரையில் அதிமுகவுக்கு முத்து ஸ்டிராங் மேனாக இருந்தார் என்றால் திமுகவுக்கு பொன் முத்துராமலிங்கம் என்று கூறும் அளவுக்கு ஒரு காலத்தில் மதுரை திமுகவில் கோலோச்சியவர் பொன் முத்து என்று திமுகவினரால் செல்லமாக அழைக்கப்படும் பொன் முத்துராமலிங்கம்.

மதுரை மேற்கு என்றாலே முத்துராமலிங்கம்தான்
மதுரை மேற்குத் தொகுதி என்றாலே அது பொன் முத்துராமலிங்கமாகத்தான் ஒரு காலத்தில் இருந்தது. அந்த அளவுக்கு அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக வலம் வந்தவர் பொன் முத்து.

மாஜி அமைச்சர்
கருணாநிதி அமைச்சரவையில் முக்கிய இலாகாவை வகித்துள்ளார். 2 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.

'கிரி'யுடன் மோதிய பொன் முத்து
அழகிரி என்ற பெரிய மலையுடன் மோதி அரசியல் செய்தவர் பொன் முத்துராமலிங்கம். ஆனால் ஒரு கட்டத்தில் பொன் முத்துவும், அழகிரியும் நெருக்கமாக இருந்தவர்களும் கூட.

பார்த்து பார்த்து ஓரம் கட்டிய அழகிரி
தான் மதுரைக்கு வந்து செட்டிலானபோது மதுரையில் பெரும் பிரபலமாக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், செ. ராமச்சந்திரன், பொன். முத்துராமலிங்கம் ஆகியோருடன் ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்து பின்னர் அவர்களை படிப்படியாக ஓரம் கட்டி ஒதுக்கி வைத்த பெருமைக்குரியவர்தான் அழகிரி.

ஸ்டாலினால் கிடைத்த சீட்
இந்த நிலையில் தற்போது அழகிரி கட்சியை விட்டு கட்டம் கட்டப்பட்டு விட்டதால், பொன் முத்துராமலிங்கத்தை மீண்டும் லைம்லைட்டுக்குக் கொண்டு வந்துள்ளது திமுக. அவருக்கு தேனி சீட்டைக் கொடுத்துள்ளனர். இதற்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று சொல்கிறார்கள்.

மதுரைக்கு வக்கீல் வேலுச்சாமி
அதேசமயம், மதுரை சீட்டை வக்கீல் வேலுச்சாமிக்குக் கொடுத்துள்ளனர். இவரும் கூட அழகிரியால் ஓரம் கட்டப்பட்டவர்தான். இவருக்கு தேர்தல் புதிதிதல்லை. ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர். இதுவரை அழகிரி வசம் இருந்து வந்த மதுரை தொகுதியை வேலுச்சாமி வசம் கொடுத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications