தேனி திமுக வேட்பாளர் பொன் முத்துராமலிங்கம்.. 'வாத்தியாரை'யே எதிர்த்த 'தில்' ராமலிங்கம்!
சென்னை: தேனி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் 74 வயது பொன் முத்துராமலிங்கம், மதுரை மண்ணைச் சேர்ந்தவர். அங்கிருந்து இடம் பெயர்ந்து தேனியில் களம் காண்கிறார்.
ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரையே எதிர்த்துப் போட்டியிட்டு, எம்.ஜி.ஆருக்கு எதிராக பம்பரம் போல சுற்றிச் சுழன்று தீவிரப் பிரசாரம் செய்து அதிமுகவினரையே நடுங்க வைத்த பெருமைக்குரியவர் பொன் முத்துராமலிங்கம்.
திமுகவின் பழைய இரும்புத் தூண்களில் ஒருவரான பொன் முத்துராமலிங்கம் நீண்ட இடைவெ்ளிக்குப் பின்னர் தேர்தல் களம் காண்கிறார் என்பதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

சோழவந்தான் முத்து
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி என்ற சின்னக் கிராமம்தான் பொன் முத்துராமலிங்கத்தின் பூர்வீக ஊராகும்.

மதுரை நரிமேட்டில்
இருப்பினும் தனது குடும்பத்தாருடன் மதுரை நரிமேடு பகுதியில்தான் பல காலமாக வசித்து வருகிறார் பொன் முத்துராமலிங்கம்.

முக்குலத்தோர்
முக்குலத்தில் ஒரு குலமான அகமுடையார் பிரிவைச் சேர்ந்தவர் பொன் முத்துராமலிங்கம்.

எம்.ஜி.ஆருடன் மோதல்
எம்.ஜி.ஆருக்கும் பொன் முத்துராமலிங்கத்திற்கும் நிறைய விசேஷம் உண்டு. எம்.ஜி. ஆரை எதிர்த்துத் தைரியமாக போட்டியிட்டு கடும் பீதியைக் கொடுத்தவர் பொன் முத்துராமலிங்கம். அவ்வளவு சுறுசுறுப்பான ஒருவர் பொன் முத்து.

திண்டுக்கல்லில் முட்டி மோதி
1972ம் ஆண்டு அதிமுக ஆரம்பித்த புதிதில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர். ஆனால் அதில் தோல்வி அடைந்தார்.

மதுரையில் 'சுந்தரபாண்டியனுடன்' மோதல்
மதுரையில் 1980ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டார் எம்.ஜி.ஆர். அப்போது அவரை எதிர்த்து பொன் முத்துவைத்தான் களம் இறக்கினார் கருணாநிதி. பொன் முத்துவும், எம்.ஜி.ஆரைக் கண்டு சற்றும் பயப்படாமல் சூறாவளி போல பிரசாரம் செய்தது அந்தக் காலத்து மதுரை மேற்குத் தொகுதியினருக்கு இன்னும் மறக்க முடியாத ஒரு விஷயம். தேர்தலில் வெற்றி எம்.ஜி.ஆருக்குத்தான்.

84ல் முதல் முறையாக எம்.எல்.ஏ.
அடுத்து 1984ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மேற்கில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1989ல் மீண்டும் போட்டியிட்டு வென்றார். இந்த முறை அவர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.

3 மகன்கள் - 2 மகள்கள்
மனைவி மல்லிகா, 3 மகன்கள், 2 மகள்களுடன் வசித்து வருகிறார் பொன் முத்துராமலிங்கம். தற்போது திமுகவில் தீர்மானக் குழுத் தலைவராக இருக்கிறார்.

பொன் முத்துவின் - முக்கியத் தகுதி
பொன் முத்துராமலிங்கத்திற்கு இந்த முறை எம்.பி சீட் கிடைக்க முக்கியக் காரணம், அவரிடம் இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் என்ற அதி முக்கியத் தகுதிதான் என்று சொல்கிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications