கோவண சாமியை கும்பிட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வசித்து வரும் கோவணச் சாமியார் என பக்தர்களால் அழைக்கப்படும் ராஜ்குமார் சாமியாரை, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆசி பெற்றார்.
அரசியல்வாதிகளுக்கும் சாமியார்கள், ஜோசியர்கள், மந்திரவாதிகளுக்கும் இடையே எப்போதுமே நல்ல உறவு இருக்கும்.
தேசிய அளவிலும் சரி, மாநிலஅளவிலும் சரி ஜோசியர்களுக்கு அரசியல்வாதிகளிடையே எப்போதுமே நல்லமதிப்பு இருக்கும்.
கிவ் அண்ட் டேக் பாலிசி:
தமிழகத்திலும் சில அரசியல் தலைவர்கள் இப்படிப்பட்ட ஜோசியர்கள், சாமியார்களுடன் நல்லுறவைப் பேணி வருகின்றனர்.
கோவணச் சாமியார்:
இந்த நிலையில் மத்திய அமைச்சராகியுள்ள பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு சாமியாரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அவரது பெயர் கோவணச் சாமியார்.
"அது" மட்டும்தானாம்:
இவர் வெறும் கோவணம் மட்டுமே கட்டுவார் என்பதால்தான் இந்தப் பெயராம். இவரது உண்மையான பெயர் ராஜ்குமார்.
நிர்வாணச் சாமியின் சீடர்:
இவர் மன்னார்குடியில் வசித்து வரும் நிர்வாணச் சாமியாரின் பிரதம சீடராக இருந்தவராம். கட[ந்த 5 வருடமாக கார்காவயல் கிராமத்தில் கோவில் கட்டி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
மலர் கீரிடம், பரிவட்டம்:
இவரைத்தான் தற்போது பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆசி பெற்றார். அமைச்சருக்கு பரிவட்டம் கட்டி மலர் கிரீடமும் சூட்டினார் சாமியார்.
அவருக்கு பைத்தியம்:
இப்படித்தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், அப்பா பைத்தியசாமி என்ற சாமியார் மீது உயிரையே வைத்துள்ளார் என்பது முக்கியமானது.
இவருக்கு கோவணம்:
பைத்தியசாமியின் உத்தரவு கேட்காமல் ஒரு வேலையும் செய்ய மாட்டாராம் ரங்கசாமி. அப்படித்தான் இப்போது பொன்ராவும் கோவண சாமியிடம் ஆசி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications