தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு
சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று மாலை திடீரென சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அன்றிரவே, அதிமுக எம்எல்ஏக்கள் கூடி, சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர்.

இதற்கிடையே, பொதுச் செயலாளர் மட்டுமின்றி சசிகலா தமிழக முதல்வராகவும் வரவேண்டும் என்ற கோரிக்கையை அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் டிசம்பர் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழக அரசியல் சூழ்நிலைகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்துவரும் வித்யாசாகர் ராவை பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆளுநர் மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார். இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை 1 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருமானவரித் துறையினரின் அதிரடி சோதனைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications