இந்தி திணிப்பு விவகாரம்..உங்க முகத்தில் கருப்பு மை பூசிக்குங்க... பொன். ராதா பாய்ச்சல்!
இந்தி திணிப்பை எதிர்க்கும் தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.
சென்னை: மைல் கற்களில் இந்தி எழுத்துகள் மீது கருப்பு மை பூசி அழிப்பதற்கு பதிலாக உங்க முகத்தில் பூசிக் கொள்ளுங்கள் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்டு வருகிறது. இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதற்கு லாவணி கச்சேரி பாடிய பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராக டி.ஆர். பாலு இருந்தபோது அவர்தான் இந்தியில் எழுத உத்தரவிட்டிருந்தார் என சாடியிருந்தார். இதற்கு டி.ஆர். பாலு கடும் கண்டனம் தெரிவித்து வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் தார் சட்டிகளை தூக்கி இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டுமா? என வீரமணி உள்ளிட்டோர் அறிவித்துள்ளது குறித்து பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு கடுப்புடன் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், அவங்க முகத்தில் கருப்பு மை பூசிக் கொள்ளட்டும் என சாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications