மன்னிப்பு கேட்பதினால் வைரமுத்துவுக்கு என்னவாகிவிட போகுது... பொன்னார் கேள்வி
ஆண்டாள் விவகாரத்தில் மன்னிப்பு கேட்பதினால் வைரமுத்துவுக்கு என்னவாகிவிட போகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

திருச்சி: ஆண்டாளை தன் தாயாக போற்றுவதாக கூறும் வைரமுத்து, தாயிடம் மன்னிப்பு கேட்பதால் தரம் தாழ்ந்து விடுமா என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு ஆய்வறிக்கையில் வெளிநாட்டு எழுத்தாளர் ஆண்டாள் குறித்து கூறியிருந்ததை மேற்கோள் காட்டியிருந்தார்.

இது ஆண்டாளை தவறாக விமர்சிப்பது போன்ற அர்த்தத்தை கொடுக்கிறது. இதனால் வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தனக்கு தாய்ப்பால் கொடுத்து ஊட்டி வளர்த்த தாயை போல் தமிழ்ப் பால் கொடுத்து ஊட்டி வளர்த்த ஆண்டாளும் தனக்கு ஒரு தாய்தான் என்றும் தனது தாயை சிறுமைப்படுத்தி பேசுவேனா என்றும் கேள்வி எழுப்பிய வைரமுத்து, தான் கூறிய வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை கூறி விளக்கமளித்தும் பலனில்லை.
வைரமுத்து பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜீயர் சடகோப ராமானுஜர் கெடு விதித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில் தன் தாய்க்கு நிகராக ஆண்டாளை மதிப்பதாக கூறும் வைரமுத்து, அந்த தாயிடம் மன்னிப்பு கேட்பதால் அவரின் தரம் தாழ்ந்து விடாது என்றார்.
ஜீயரின் சோடா பாட்டில் வீச்சு கமென்ட் குறித்து அமைச்சர் பொன்னார் கூறுகையில், அவர் நல்ல அர்த்தத்தில் கூறியிருப்பார். சோடா குடித்து விட்டு பாட்டிலை வீசிதானே எறிவோம், அந்த அர்த்தத்தில் கூறியிருப்பார் என்று சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications