பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் ஓசூரில் ஆதரவு.. கோவையில் எதிர்ப்பு... பொன்னார் அந்தர் பல்டி
கோவை: பேருந்து கட்டண உயர்வு சரியானதே என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியிருந்த நிலையில் தற்போது அப்படியே அந்தர் பல்டி அடித்து பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியுள்ளது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டணத்தை ஏற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

66 சதவீத கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் எம்எல்ஏக்களின் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டியதுதானே என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசை கண்டித்து ஜனவரி 24-ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓசூரில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பேருந்து கட்டண உயர்வு சரியானதே. போக்குவரத்து துறை நலிவடைந்துள்ளது என்றார் அவர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழிசை கோரும் நிலையில் தமிழக அரசுக்கு பொன்னார் ஆதரவு தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது அவர் கூறுகையில், பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும். பேருந்து கட்டணத்தை சிறிது சிறிதாக உயர்த்தியிருக்கலாம் என்று அவரது கருத்தில் இருந்தே மாறுப்பட்ட ஒரு கருத்தை தெரிவித்தார். பேருந்து கட்டண விவகாரத்தில் பாஜகவில் கருத்து வேறுபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பேருந்து கட்டண விவகாரத்தில் இரு வேறு கருத்துகளால் சர்ச்சை எழுந்ததை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது கருத்தை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications