சென்னைக்கு வந்த ஜவடேகர் யாரையும் சந்திக்கவில்லை.. சொல்கிறார் பொன். ராதா
சென்னை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்திருந்தபோது எந்தத் தலைவரையும் சந்தித்துப் பேசவில்லை என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஜவடேகர் சென்னைக்கு ரகசிய பயணமாக வந்திருந்தார். தமிழக தலைவர்களுக்குக் கூட தெரியாமல் வந்திருந்தார். சென்னையில் ரகசியமான முறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் சந்தித்துப் பேசியதாக கூறப்பட்டது.
ஆனால் அப்படி அவர் யாரையும் சந்திக்கவில்லை என்று தற்போது பொன். ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆயிரக்கணக்கில் விருப்ப மனுக்கள்
இது வரை இல்லாத அளவுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் ஆயிரக்கணக்கானவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். அதன் பிறகு கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் அமைவதை பொறுத்து பிற நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை.

திமுக
திமுக காங்கிரஸை வெறும் ஒப்புக்காகவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. நால்வர் அணி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

அதிமுக
அதிமுக தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டணி அமைப்பதில் பாஜக அவசரமே காட்டாது. நிதானமாகத் தான் செயல்படும். பாஜக எந்த நடவடிக்கையையும் திரைக்கு பின்னால் செய்யாமல் அனைவருக்கும் தெரியும்படி தான் செய்யும்.

தேமுதிக
தேமுதிக பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்குமா என யூகங்களின் அடிப்படையில் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எந்த அரசியல் தலைவரையும் சந்தித்து பேசவில்லை என்று அவரே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்
திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் அது காங்கிரஸை கூட்டணியில் வைத்துக் கொள்ளுமா அல்லது தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளால் தேர்தலில் என்ன விளைவு ஏற்படுமோ என கருதி கழற்றிவிடுமா என தெரியாது. திமுக வெற்று சுமையை சுமக்கும். எந்த கட்சியின் நிலைப்பாட்டிற்காகவும் காத்திருக்காமல் பாஜக தனது தேர்தல் பணிகளை தொடர்ந்து செய்யும்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications