அதிகரிக்கும் பலாத்காரங்கள்.. புதுவையில் 16 வயது சிறுமிக்கு தொல்லை.. துபாய் தண்டனைதான் சரிவரும் போல!
புதுவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Recommended Video

புதுவை: புதுவையில் 16 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக 8 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருக்கனூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் பேருந்தில் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு பேருந்தில் சென்று வரும் போது விக்கி என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனால் விக்கி திடீரென சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து விக்கியின் நண்பர்கள் 7 பேரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து விக்கி, முகிலன், கண்ணதாசன், சூர்யா, அசோக், தேவா, கலை, மற்றொரு சூர்யா ஆகியோர் மீது சிறுமி திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications