வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு- பொன்முடி, மனைவி விசாலாட்சி விடுதலை
விழுப்புரம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் க. பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவர் பொன்முடி. தற்போதைய சட்டசபை தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடி போட்டியிடுகிறார்

பொன்முடி மீது 2011-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்த 39 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இன்று இந்த வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி தீர்ப்பளித்தார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டது; இன்று நீதிமன்றம் எங்களை விடுதலை செய்துள்ளது என்றார்.
தேர்தலில் போட்டியிட தடை நீங்கியது
இந்த தீர்ப்பை பொன்முடியும், திமுகவினர் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். காரணம், இதில் பொன்முடிக்கு பாதகமாக தீர்ப்பு வந்திருந்தால் அவரால் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போயிருக்கும். திமுகவுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கும் என்பதால். ஆனால் தற்போது அவர் விடுதலையாகி விட்டதால் அவரும் தப்பினார், திமுகவும அவப் பெயரிலிருந்து தப்பி விட்டது. பொன்முடி போட்டியிடவும் தற்போது சிக்கல் ஏதும் இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications