வாக்காளர்களை பிரதமர் ஆக்கிய பொன்முடி!
விழுப்புரம்: திமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு செல்லும் இடத்தில் எல்லாம் பொது மக்களை பார்த்து , வருங்கால பிரதமர்களே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேட்கின்றாராம்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளவர் டாக்டர் முத்தையன். இவரை எப்படியும் வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டியது உங்களுடைய பெறுப்பு என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,பொன்முடிக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
இதனையடுத்து, தீவிரமாக தேர்தல் களத்தில் பொன்முடி குதித்தார். திமுக வேட்பாளர் டாக்டர் முத்தையனை ஆதரித்து , வானூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது மைக் பிடித்த பொன்முடி, எங்கள் எதிரில் கூடியள்ள வருங்கால பாரத பிரதமர் அவர்களே.. என கூப்பிட கூடியிருந்தோர் புன்னகைத்து ஆர்ப்பரித்தனராம்.
பிரசாரம் செல்லும் இடம் எல்லாம் பார்ப்பவரை எல்லாம், அண்ணா உள்ளிட்ட உறவுகளில் கூப்பிடுவதற்குப் பதில் வருங்கால பாரத பிரதமரே உங்கள் வாக்கு எங்களுக்கே போடுங்க என அதிரடி பிரச்சாரம் செய்கின்றாராம்.
இந்த நிலையில், குசும்பு பிடித்த ஒருவர் ஒரு வயது சிறுவனை பொன்முடி முன்பு அழைத்துக் கொண்டு போய் நிறுத்தி என்ன சொல்கின்றார் என டெஸ்ட் செய்ய, உடனே சமாளித்த பொன்முடி, வருங்கால மைனர் பிரதமரே, உங்க அப்பா , அம்மாகிட்ட சொல்லி ஓட்டை எங்களுக்கு போட சொல்லுங்க என கூற அந்த இடமே சிரிப்பொலியில் மிதந்ததாம்.












Click it and Unblock the Notifications