"பூவை ஜெகன்மூர்த்தி" கிட்ட அதை கேட்டதுமே.. நாசரை விடுங்க.. புடிச்சிட்டாரே பாயிண்ட்டை.. "கேட்டுச்சா"
சென்னை: புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கேவி குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி முக்கிய வேண்டுகோள் ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.. இது பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று நினைப்பவர்களுள் பூவை ஜெகன் மூர்த்தியும் ஒன்று.. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்றும் அப்போதுதான் அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியும் என்றும் செய்தியாளர் பேட்டியிலேயே பலமுறை தெரிவித்தவர்.
அதிமுகவிலிருந்து சிலர் விலகியிருப்பதால்தான், தமிழக சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் ஆதங்கத்தை அப்போது வெளிப்படுத்தியிருந்த பூவை ஜெகன், சசிகலா இல்லாததால் தான் அதிமுக ஆட்சியை நழுவவிட்டதாகவும் காரணத்தை கூறியிருந்தார்.

வாய்ப்பு குறைவு: அதுமட்டுமல்ல, தமிழக அரசியலை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை காட்டிலும் தனித்துவமானது என்றும் இங்கு திராவிடக் கட்சிகளை மீறி தேசியக் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது.. பாஜக தலைமையில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க வாய்ப்பு குறைவு.. திராவிடக் கட்சிகளுடன் வேண்டுமானால் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளலாம்.. ஆனால், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை குறைத்து எடை போட முடியாது, காரணம் அந்த கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது" என்றும் கூறி பலரை கவனிக்க வைத்தவர் பூவை ஜெகன் மூர்த்தி.
கூட்டம் பேட்டி: இப்போது, முக்கிய கோரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கோர்ட் வளாகத்தில், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.. இதில், கேவி குப்பம் எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டார்.. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:

"அமைச்சரவையில் நேற்று மாற்றம் நடந்துள்ளது.. இது சம்பந்தமாக முன்கூட்டியே முடிவு செய்திருப்பார்கள்.. இதில், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பேரில் ஏதாவது அதிருப்தி இருந்தாலோ அல்லது கொடுக்கின்ற பணியை சரியாக செய்யவில்லை என்றாலே, முதல்வர் அவர்களின் இலாகாக்களை மாற்றி தந்து உத்தரவிடுவார்.. இதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு.. ஆனால், எதற்காக மாற்றம் என்பது குறித்து முதல்வரிடம்தான் கேட்க வேண்டும்..
நாசர் பதவி: அதேபோல, அமைச்சராக பதவியேற்றுள்ள டிஆர்பி ராஜாவின் செயல்பாடுகள் குறித்து இப்போதே சொல்ல முடியாது.. 6 மாத காலம் ஆனால்தான், தெரியவரும்..
சிறுபான்மை இன மதத்தைச் சேர்ந்த நாசரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் வேறொரு சிறுபான்மை இன நபருக்குத்தான் அந்தப் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.. வேறு மதத்தினை சார்ந்தோருக்கு வாய்ப்பை தருவது என்பது, சிறுபான்மையினர் மக்களுக்கான வாய்ப்பு பறிபோவதாகவே அர்த்தம்.. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை புரட்சி பாரதம் கண்டிக்கிறது" என்று பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications