சென்னை குண்டுவெடிப்பு: முதல்கட்ட மீட்புப் பணியில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்...
சென்னை: குண்டு வெடித்த இடத்தில் முதல்கட்ட மீட்புப் பணியில் அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளார்கள் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
மேலும் படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது :-
9ம் பிளாட்பார்மில் கவுகாத்தி ரயில் வந்து நின்றது. நாங்கள் 5ம் பிளாட்பார்மில் இருந்து அங்கு விரைந்து வந்தோம். அப்போது ரயிலில் இருந்து பயங்கரச் சத்தம் கேட்டது. சம்பவ இடம் முழுவதும் புகையால் சூழ்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு போலீசார் அங்கு வருவதற்குள்ளாக நாங்கள் ரயிலுக்குள் விரைந்தோம். அங்கு காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications