ரூ.2000 கடனுக்காக 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கோழிப்பண்ணை அதிபர் கைது!
வேலூர்: தாய் வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக அவரது 5 வயது மகளை கடத்தி பலாத்காரம் செய்த வேலூர் கோழிப்பண்ணை அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர், பழைய நகரைச் சேர்ந்தவர் கோழிப் பண்ணை அதிபர் முபாரக். இவரிடம் வேலூர், தேவராஜ நகரைச் சேர்ந்த ஒரு பெண் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். அந்த கடனை அந்த பெண்ணால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் முபாரக் அந்த பெண்ணை ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலம்நேருவில் உள்ள தனது கோழிப்பண்ணையில் வேலை செய்து கடனை அடைக்கும்படி வற்புறுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார்.
அந்த பெண்ணும், தனது 5 வயது மகளுடன் அந்த கோழிப்பண்ணையில் சில நாள் வேலை செய்திருக்கிறார். ஆனால், 'சரியாக வேலை செய்யவில்லை' எனக்கூறி அந்த பெண்ணை முபாரக் வேலையில் இருந்து நீக்கி விட்டார். 'மகளை மட்டும் வேலைக்கு வைத்துக் கொண்டு கடனை செலுத்தி விட்டு மகளை அழைத்து செல்' எனக் கூறியிருக்கிறார்.
வேலூர் திரும்பிய அந்த பெண் பணத்தை திரட்டிக்கொண்டு, கடனை அடைத்து மகளை மீட்க பலம்நேரி கோழிப் பண்ணைக்கு சென்று, மகளை பார்த்த போது அவரை அதிர்ச்சி அடையச் செய்தது. மகள் உடம்பில் சூடு போடப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருந்தாள். அதோடு தன்னை முபாரக் கற்பழித்ததாகவும் சிறுமி கூறினாள்.
இதையடுத்து, தாய் வலம்நேரு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முபாரக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications