படிப்படியாக குறையும் தென்மேற்கு பருவகாற்று - மீண்டும் வருமா மின்தடை?
நெல்லை: இரண்டு மாத காலங்களாக நன்றாக வீசி வந்த தென்மேற்கு பருவகாற்று மூலம் 2500 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் தற்போது அவை குறைய தொடங்கி வி்ட்டதால் மீண்டும் மின் வெட்டு தலை தூக்கும் அபாயம் எழுந்துள்ளதாக - மின் வாரியத்தினரே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக காற்று சீசன்காலங்களில் நெல்லை மண்டலத்தில் 10 ஆயிரம் காற்றாலைகள் மூலம் தினமும் 3 முதல் 4,000 மெகா வாட் வரை மின்சாரம் கிடைக்கிறது.
இருப்பினும் இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல முறையான மின் பாதை இல்லை.

முடக்கி வைக்கப்படும் மின்சாரம்
சில நேரங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் காற்றாலை நன்கு இயங்கினாலும் சில நேரங்களில் அவை முடக்கி வைக்கப்படுகிறது.

கை கொடுத்த காற்றாலைகள்
தமிழகத்தில் பல ஆண்டுகளாக மி்ன்தட்டுபாடு நிடித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மின்தடை நீக்குவதற்கு காற்றாலை மின்சாரம் கை கொடுத்தது.

நாள்தோறும் 2500 மெகாவாட்
இதனால் நாள்தோறும் 2500மெகா வாட் மின்சாரம் கிடைத்து வந்தது. இந்நிலையில் அதிகாலை வெறும் 255 மெகா வாட்டாக காற்றாலை மின் உற்பத்தி சரிந்து விட்டது.

திகைப்பில் மின்வாரியம்
கடும் வெயில் அடிக்கும் கோடை காலங்களில் மட்டுமே இந்த இரட்டை இலக்க சரிவை காற்றாலை மின் உற்பத்தி சந்திக்கும். இதனால் மி்ன் வாரியத்தினர் திகைத்து போய் உள்ளனர்.

சீசன் முடிந்தது... காற்றும் நின்றது
தற்போது குற்றால சீசன் நிறைவடைந்து விட்டதால் இனிமேல் காற்று எதிர்பார்த்த அளவு கிடைக்க வாய்ப்பில்லை. அதிகாலை நேரங்களில் மட்டும் ஓரளவுக்கு காற்று வீசும்.

மீண்டும் வருமா ஷாக்...!
இதனால் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் மின்தடை தலைதூக்க வாய்ப்புள்ளதாக மின் வாரியத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications