காற்றாலை மின் உற்பத்தி திடீர் சரிவு.. மீண்டும் வருமா பல மணி நேர மின்வெட்டு?
நெல்லை: கடந்த சில வாரங்களாக நல்ல முறையில் கிடைத்து வந்து காற்றாலை மின்சாரம் திடீரென சரிந்ததால் மீண்டும் பல மணி நேர மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக காற்றாலை மின்சாரம் போதிய அளவு கிடைத்து வந்தது. இதனால் மின்வெட்டு நேரம் கணிசமாக குறைந்தது.
மேலும் குளிர்காலம் என்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடும் குறைந்திருந்தது. இதனாலும் மின்வெட்டு அடியோடு குறைந்திருந்தது. ஆனால் தற்போது காற்றாலை மின்சாரம் குறைந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

தினசரி 11,000 மெகாவாட் தேவை
தமிழகத்தில் நாள்தோறும் 11 ஆயிரம் மெகாவாட்டுக்கும் மேல் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் பற்றாக்குறை சுமார் 3000 மெகா வாட் வரை ஏற்படுகிறது. இதனால் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமுலில் இருக்கின்றது.

ஏசி குறைந்தும் தேவை குறையவில்லை
தற்போது குளிர் நிலவி வருவதால் ஏசி, மின்விசிறி போன்றவற்றின் பயன்பாடுகள் வெகுவாக குறைந்துள்ளது. ஆயினும் மின் தேவை குறைந்தபாடில்லை.

காற்றாலைகளால் மின்வெட்டு கட்டுக்குள் வந்தது
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காற்றாலை மூலம் நன்கு மின்சாரம் கிடைத்து வந்தது. இதனால் மின் வெட்டு ஓரளவுக்கு தளர்த்தப்பட்டது.

மீண்டும் குறைந்த காற்றாலை மின்சாரம்
ஆனால் கடந்த சில வாரங்களாக காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இரட்டை இலக்க அளவை தாண்டவே இல்லை. கடந்த மாதம் அதிகபட்சமாக 1250 மெகா வாட் அளவுக்கு கிடைத்த காற்றாலை மின்சாரம் தற்போது இறங்கு முகமாக இருப்பதால் தமிழக மின் வாரியம் திகைப்பில் உள்ளது.

நேற்று இரவு வரை 110 மெகாவாட்தான்
நேற்று இரவு வரை காற்றாலை மூலம் அதிகபட்சமாக 110 மெகா வாட் மட்டுமே மின்சாரம் கிடைத்தது. அது அதிகாலை மேலும் குறைந்து 90 மெகா வாட் மட்டுமே கிடைத்தது. காற்றாலை மின் உற்பத்தி இப்படி திடீரென சரிந்ததால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமுலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டு முதல் பல மணி நேர மின்வெட்டு வருமா..
புத்தாண்டுக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் வணிக நிறுவனங்களில் அதிக அளவில் வியாபாரம் நடக்கும். அந்த சமயத்தில் அதிக மின் நுகர்வு இருக்கும். தற்போது மின்சாரம் குறைந்த அளவில் கிடைத்து வருவதால் வியாபாரிகளும் கையை பிசைய தொடங்கியுள்ளனர். இதனால் அதனை கருத்தில் கொண்டு பகல் நேரத்தில் மின்வெட்டு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications