கம்பம் அரசு மருத்துவமனையில் 16 மணி நேர மின்வெட்டு... நோயாளிகள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட 16 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

தமிழகம் முழுவதும் மின்வெட்டுப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. தேர்தல் களத்திலும் மின்வெட்டுப் பிரச்சினையின் தாக்கம் இருக்கத் தான் செய்கிறது. இந்நிலையில் மக்கள் உயிர் காக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளும் மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்டது அங்கிருந்த நோயாளிகளை கோபப் பட வைத்தது.

கம்பம் அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஏற்பட்ட மின்தடை இரவாகியும் திரும்பவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த உள்நோயாளிகள், தாய்மார்கள் மற்றும் உடனிருந்தோர் மருத்துவமனையைக் காலி செய்து கிளம்ப ஆரம்பித்தனர்.

பின்னர் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அதிகாரிகள் வந்து சமாதானப் படுத்தினர். பின்னர் விரைந்து மின்சாரம் கொடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு 9 மணி சுமாருக்கு மீண்டும் மின்சாரம் திரும்பியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+