கோவையில் 4 மணி நேரமாக குறைந்து விட்டதாமே மின்வெட்டு...!
கோவை: கோவையில் பல மணி நேர மின் வெட்டு தற்போது 4 மணி நேரமாக குறைந்துள்ளதாக டான்ஜெட்கோ கூறுகிறது.
கடந்த சில வாரங்களாக குறைந்தது 9 மணி நேரம் வரை அங்கு மின்வெட்டு அமலாகி வந்தது. இதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. கோவை என்று மட்டும் இல்லாமல் திருப்பூர், ஈரோடு என தொழில் மாவட்டங்கள் பல மணி நேர மின்வெட்டை சந்தித்து பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளன
ஆனால் தற்போது இது நான்கு மணி நேரமாக குறைந்திருப்பதாக டான்ஜெட்கோ கூறுகிறது. இதுகுறித்து டான்ஜெட்கோ அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது அனல் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் மின்வெட்டு நேரம் 4 மணி நேரமாக குறைந்திருக்கிறது. அனல் மின்சாரம் கூடுதலாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கோவை மாவட்டத்தில், மின்வெட்டு நேரம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.
தற்போது காற்றாலை மின்சாரம் சுத்தமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை தினசரி 500 மெகாவாட் மின்சாரம் வரை காற்றாலைகள் மூலம் கிடைத்து வந்தது. தற்போது அது குறைந்து விட்டது என்றார்.
கோவை பிராந்தியத்திற்குட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் தினசரி மின் தேவை, 3.1 கோடி யூனிட்டாகும். ஆனால் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி இல்லை என்பதால் விநியோகத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாம்.
இருப்பினும் தற்போது கிட்டத்தட்ட 2 கோடி யூனிட் வரை மின்சாரம் கிடைத்து வருவதால் கடந்த சில நாட்களாக, அதாவது மூன்று நாட்களாக மின்வெட்டு நேரம் மூன்றரை மணி நேரம் முதல் 4 மணி நேரமாக குறைந்துள்ளதாம். கோவை நகரின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மின்தடை இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications