பவர் சோப் நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் ஐடி ரெய்டு... 50 இடங்களில் அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல் அடுத்த கொடைரோட்டில் வசித்து வருபவர் தனபால். இவருக்கு சொந்தமான பவர் சோப்பு கம்பெனி அம்மைய நாயக்கனூரில் உள்ளது.
கொடைரோட்டில் உள்ள தனபாலுக்கு சொந்தமான பங்களா வீடு மற்றும் கம்பெனி, அலுவலகம் ஆகிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 8 மணிக்கு வந்த அதிகாரிகள் பங்களா வீட்டில் உள்ள முன்பக்க கதவை இழுத்து பூட்டிவிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகள் ஏராளமான ஆவணங்களை சரிபார்த்தனர். முன்னதாக வீட்டிற்குள் உள்ளவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளிநபர்கள் யாரும் உள்ள வரக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அம்மையநாயக்கனூரில் உள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. தொடர்ந்து அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல பவர் சோப்புக்கு சொந்தமான மதுரை, காரைக்கால், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்களில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறோம். முழுமையாக சோதனை நடத்திய பிறகே முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என்று கூறுவோம் என்றனர்.
பவர் சோப்பு கம்பெனி மற்றும் பங்களா வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications