For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீர் பந்தலுக்கு தடையில்லை…. நன்றி போஸ்டர் அடித்தால் வழக்கு: பிரவீன்குமார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே "தேர்தலில் வெற்றி, வாக்காளர்களுக்கு நன்றி!" என போஸ்டர் அடித்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார், "வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே போஸ்டர் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

Praveenkumar green singal for Thaneer Pandal

இதுபோன்று வாக்கு எண்ணுவதற்கு முன்னதாகவே வெற்றி போஸ்டர் வைத்த விவகாரத்தில் காஞ்சிபுரம் அ.தி.மு.க வேட்பாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.

வாக்கு எண்ணுவதற்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரையில் மே 5 முதல் 7ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் மே தின கொண்டாட்டம், தண்ணீர் பந்தல் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்.கே.பி. நகர் மக்களுக்கு வீடு ஒதுக்க எந்த தடையும் இல்லை" என்று தெரிவித்தார்.

English summary
Chief Electoral Officer (CEO) Praveen Kumar on Tuesday warned political parties, don’t paste any Thanks poster for voters. He was green signal for political parties from hosting summer water pots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X