மாமியார் சொன்ன அந்த வார்த்தை! நெஞ்சில் ஈட்டியாக குத்திய சம்பவம்! 4 மாத கர்ப்பிணி விபரீதம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மாமியார் அவதூறாக பேசியதால் மன உடைந்த 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மீனா. இவர்களது இரண்டாவது மகள் நந்தினி (21). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.

அப்போது நந்தினிக்கும் ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்ததாக தெரிகிறது. இதனிடையே இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த தகவலை அறிந்ததும் இருவரின் பெற்றோர்களும் அவர்களை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இவர்கள் இருவரும் ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியில் வசித்தனர். இவர்களுடன் குருநாதனின் தாயும் வசித்து வந்தார். இந்த நிலையில் நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவரை மாமியார் காஞ்சனா அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து நந்தினி, தனது தாய் மீனாவிடம் அழுதுக் கொண்டே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நந்தினியின் தாய் மீனா அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நந்தினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாமியார் காஞ்சனாவிடம் விசாரணை நடத்துமாறு நந்தினியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நந்தினியை மாமியார் என்ன சொன்னார் என தெரியவில்லை, ஒரு வேளை குழந்தையை தவறாக பேசினாரா, இல்லை நந்தினியின் கேரக்டரை சிதைத்து பேசினாரா என்பதும் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவரிடம் விசாரணை நடத்தினால்தான் தெரியும்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications