அவர் சகாயம் அல்ல.. நம்ம "கேப்டன்"தான்.. கோவையில் கலகலப்பூட்டிய பிரேமலதா
கோவை: கோவையில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா பேசிய பேச்சு தொண்டர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மனைவி பிரேமலதா பேசுவதை விஜயகாந்த்தும் ஆர்வமாக கவனித்து வந்தார்.

கோவையில் தேமுதிகவின் 11வது ஆண்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டனர் விஜயகாந்த்தும், பிரேமலதாவும். இந்த மாநாட்டில் பிரேமலதா பேசிய பேச்சிலிருந்து சில சுவாரஸ்ய துளிகள்...கிரானைட் குவாரி மோசடிகளை விசாரித்து வரும் சகாயம், நியாயத்தை நிலை நாட்ட அமாவாசை இரவில் மயானத்தில் படுத்து தூங்குகிறார்.
- அந்த காட்சியை நான் டி.வி.யில் பார்த்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சகாயம் எனக்கு கேப்டனை போல தெரிகிறார்.
- நியாயத்தை நிலை நிறுத்த சகாயம் போராடி வரும் அதே மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த் தான் அவருக்கு உதாரணமாக இருக்கிறார்.
- சகாயத்துக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் தவறான அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு, சகாயம் மாதிரியான நேர்மையான அதிகாரிகள் தான் இருப்பார்கள்.
- விஜயகாந்த் நடித்த படங்கள் தான் போலீசாருக்கு பாடங்களாக உள்ளன. போலீஸ் அகடாமியில் விஜயகாந்த்தின் படங்கள் தான் போட்டு காட்டப்படுகிறது என்றார் பிரேமலதா.
அங்கே என்ன தெரிகிறது?
பிரேமலதா இவ்வாறு சீரியஸாக பேசிக் கொண்டிருந்தபோது அருகே அமர்ந்திருந்த விஜயகாந்த், தனக்கு எதிரில் இருந்தவர்களிடம் சைகை மொழியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். படு சீரியஸாக அவரது சைகை மொழி உரையாடல் இருந்தது. அவர் என்ன பேசினார், என்ன சொல்ல வந்தார் என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த் பேசியதை அவருக்கு அருகே அமர்ந்திருந்தவர் ரொம்பவே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த சைகை உரையாடலைப் பார்த்தபோது "சுறா" படத்தில் இசைக் கச்சேரி நடத்தும் வெண்ணிற ஆடை மூர்த்தியைப் பார்த்து வடிவேலு சைகையில் பேசுவாரே.. அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications