அவதூறு வழக்கில் முன் ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் பிரேமலதா மனு
சென்னை: திருப்பூர் போலீசார் பதிவு செய்துள்ள அவதூறு கிரிமினல் வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை வரும் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமலதா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சட்டசபை தேர்தலை யொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறேன். கடந்த ஏப்ரல் 1-ந் தேதி திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அவதூறாக பேசியதாக என் மீது திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நான் யாரையும் அவதூறாக பேசவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்த கருத்தை வலியுறுத்தித்தான் பேசினேன். இதனால், வைகோவையும் இந்த வழக் கில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
தேமுதிகவுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற் காக உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரணையை வரும் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications