பண்ருட்டியாரே, நீங்க காட்டிய விசுவாசம் இதுதானா?.. பிரேமலதா கேள்வி
சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனுக்காக ஆலந்தூர் தொகுதியை அதிமுகவிடமிருந்து பெற்றுத் தந்தவர் விஜயகாந்த். ஆனால் அவர் காட்டிய விசுவாசம், எங்களுக்குக் கொடுத்த பரிசு, துரோகம்தான் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை ஆலந்தூர் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் காமராஜுக்கு ஆதரவாக பிரேமலதா பிரசாரம் செய்து பேசினார்.
அவர் பேசுகையில், தர்மயுத்தம் நடக்கும்போது ஒருவன் எதிரணியில் போய் சரண் அடைந்தால் அவன் தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழப்பான். தர்மயுத்தத்தை சந்தித்து எதிரியை எதிர்கொள்பவன் வாழ்க்கையில் எல்லா வெற்றியையும் பெறுவான்.

எம்.ஜி.ஆர். போட்டியிட்ட ஆலந்தூர் தொகுதியை பண்ருட்டி ராமச்சந்திரனை விஜயகாந்த் பெற்று தந்தார். அதற்கு பண்ருட்டி ராமசந்திரன் காட்டிய நன்றி விசுவாசம் இதுதானா?
எம்.ஜி.ஆரால் அறிமுகம் செய்யப்பட்டவர் பண்ருட்டி ராமச்சந்திரன். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தமிழகத்தில் எத்தனை கட்சிகள் இருக்கிறதோ அத்தனை கட்சிகளுக்கும் ஒரு சுற்று போய் விட்டு விஜயகாந்திடம் வந்து தஞ்சம் அடைந்தார்.
அரசியலில் ஓரம் கட்டப்பட்டு இருந்தவரை விஜயகாந்த் மீண்டும் மக்கள் முன்னால் நிறுத்தி தன் பக்கத்தில் வைத்து அழகு பார்த்தார். அதற்கு அவர் கொடுத்த பரிசுதான் நம்பிக்கை துரோகம். அவரை எம்.ஜி.ஆர். ஆன்மா மன்னிக்காது என்றார் பிரேமலதா.
பண்ருட்டியார் ராஜினாமா செய்ததால்தான் ஆலந்தூர் தொகுதியில் தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது பண்ருட்டியார் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது நினைவருக்கலாம்.












Click it and Unblock the Notifications