நான் உங்கள் ஊர் மருமகள்... மதுரையில் பிரேமலதாவின் சென்டிமெண்ட் பிரச்சாரம்
மதுரை : மதுரைக்காரங்க ரொம்ப பாசக்காரங்க என்று தெரிந்துதான் என்னவோ அண்ணியார் பிரேமலதாவின் பிரச்சாரமும் சென்டிமெண்ட் ஆகவே அமைந்தது.
மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற தினமான நேற்று மதுரை வடக்கு தொகுதி தேமுதிக வேட்பாளார் முஜுபுர் ரகுமானை ஆதரித்து புதூர் பேருந்து நிலையத்தில் நேற்று பிரசாரம் செய்தார்
அப்போது பேசிய அவர், இன்று மீனாட்சி திருக்கல்யாணம். இந்த நன்நாளில் உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினார். என்னை பெண் பார்க்க விஜயகாந்த் வந்தபோது அவர் மீனாட்சி திருவிளையாடல் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
திருமணத்திற்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் கூட அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதாவின் முகத்தை எடுத்துவிட்டு எனது முகத்தை வைத்து பலர் திருமண வாழ்த்து சொல்லி இருந்தனர் என்று பழைய நினைவுகளை பேசினார் பிரேமலதா.

மதுரையின் மருமகள்
எனது கணவர் விஜயகாந்துக்கு அந்த படம் ஒப்பந்தமானபின்தான் திருமண யோகம் வந்தது என்று எனது மாமியார் அடிக்கடி கூறுவார். அது இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது என்று கூறிய பிரேமலதா, நான் வேறு யாரோ அல்ல. மதுரையின் மருமகள் என்ற உரிமையோடு உங்களிடம் ஓட்டுக்கேட்க வந்துள்ளேன் என்று சென்டிமெண்ட் ஆக பேசி கை தட்டல் வாங்கினார்.

மதுரை மல்லிகைதான் பிடிக்கும்
சென்னையில் வசித்தாலும் நான் மதுரையின் கலாச்சாரத்தைதான் 25 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறேன். மீனாட்சி திருக்கல்யாணத்தன்று புது மஞ்சள் கயிறு கொண்டு தாலியை மாற்றிக்கொள்வேன். மேலும் நான் மதுரை மல்லிகையைதான் எப்போதும் விரும்பி தலையில் வைத்துக்கொள்வேன் என்று கூறி வாக்காளர்களை வசப்படுத்தினார் பிரேமலதா

செல்லூர் ராஜூ மீது தாக்கு
மதுரை மலரும் நினைவுகள் பேச்சுக்களுக்கு இடையே கொஞ்சம் அரசியலும் பேசிய பிரேமலதா, செல்லூர் ராஜூ செல்லாக்காசு ராஜூ. 5வருடமா என்ன செய்தார் என்று தெரியவில்லை . அவர் பெயரில் மட்டும் செல்லூரை சேர்த்துகொள்ள ஆசைப்படுகிறார் அதனால் தான் அவர் தற்போது தொகுதிகளுக்கு செல்லும் போது குடத்தை வைத்து அடிவாங்குகிறார்.

தவசி வார்த்தை மாறாது
விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைந்தால் ரமணா பாணியில் ஊழலை தடுத்து புரட்சி செய்யப்படும். தமிழ்நாட்டில் இருந்து ரவுடிக்கட்சிகள் அகற்றப்படும். இதனை கருப்பு எம்.ஜி.ஆர் கண்டிப்பாக செய்துமுடிப்பார். துளசி வாசம் மாறினாலும் மாறும். ஆனால் இந்த தவசி வார்த்தை மாறமாட்டார் என்று பஞ்ச் வைத்து முடித்தார் பிரேமலதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications