நான் எங்க போனாலும் என்னை ஸ்டாலின் "பாலோ" பண்ணுகிறார்... பிரேமலதா
சேலம்: கடந்த சில நாட்களாக நான் எங்கு சென்றாலும் ஸ்டாலின் என்னை தொடர்ந்து பின்னாடியே வருகிறார். நாங்கள் கூறும் கருத்துகளுக்கு மாற்று கருத்துகளை கூறி வருகிறார் என தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் சேலத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் திமுக தலைவர் கருணாநிதியை தாக்கிப் பேசினார்.
கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறுகையில்,

முதல் அணி
தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி மூன்றாவது அணி கிடையாது. மாறாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல் அணி ஆகும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரணி தெரியவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். நாங்கள் திமுக கூட்டணிக்கு செல்லாததால் அவரது கண்ணுக்கு தெரியவில்லை.

விஜயகாந்த்
பழம் நழுவி பாலில் விழும் என்றபோது கருணாநிதிக்கு விஜயகாந்தின் பலம் தெரியவில்லையா? நீங்கள் வயதில் பெரியவர். அதனால் நான் பதில் சொல்ல மாட்டேன். மே 19ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் போது உங்களுக்கு விஜயகாந்தின் பலம் மிக பிரைட்டாக தெரியும்.

செய்வோம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை லஞ்சம் இல்லா மாநிலம் ஆக்குவோம். 34 அரசுத் துறைகளில் ஊழல் தடுப்பு பிரிவு கொண்டு வரப்படும். பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். நதிகளை இணைப்போம். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக அகற்றி டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையை உருவாக்குவோம்.

வளர்ச்சி
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை வரும் 5 ஆண்டுகளில் ஏற்படுத்துவார் விஜயகாந்த். ஜெயலலிதா தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். கடந்த சில நாட்களாக நான் எங்கு சென்றாலும் ஸ்டாலின் என்னை தொடர்ந்து பின்னாடியே வருகிறார். நாங்கள் கூறும் கருத்துகளுக்கு மாற்று கருத்துகளை கூறி வருகிறார். ஸ்டாலின் மலிவான அரசியலை கைவிட்டுவிட்டு நேர்மையான அரசியலை அளிக்க வேண்டும்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications