தேமுதிக பொதுச் செயலாளராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்?
விரைவில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விரைவில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகமே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. சமீபத்தில் அதிமுக கட்சி பெயர், இரட்டை இலை சின்னம், கொடி அனைத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழலில் தேமுதிக தலைமை நிலையம் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. அதில், விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததும் ஓரிருநாளில் விஜயகாந்த் வீட்டுக்கு திரும்புவார். ஆகையால் நிர்வாகிகளும் தொண்டர்களும் நேரில் வர வேண்டாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சாமி தரிசனம் செய்தார். விஜயகாந்திற்கு வழக்கமான பரிசோதனையே மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினாலும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் தனது வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்று தொண்டர்கள் ஆவலுடன் எதிர் பார்த்த நிலையில் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து இடைத்தேர்தல் பிரசாரத்தை கவனிக்கும் பொறுப்பு பிரேமலதா விஜயகாந்திடம் வந்துள்ளது.
மேலும் தற்போது உள்ள சூழலில் கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. இதனால் அடுத்த மாதம் முதல்வாரத்தில் மாவட்ட, ஒன்றிய அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு முடிந்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று நகரங்களில் ஒரு மாநகரத்தில் தே.மு.தி.க. பொதுகுழு கூடி பிரேமலதாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications