'கேப்டன்' பேச்சு ஏன் புரியவில்லை: பிரேமலதா தரும் விளக்கம் இது தான்!
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை என்பது குறித்து அவரது மனைவி பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார்.
தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் பேசிய பிரேமலதா, விஜயகாந்திற்கு சைனஸ் பிரச்சினை இருப்பதால் மேடைப் பேச்சில் தடுமாற்றம் இருக்கலாம். அதை சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பது சரியானது அல்ல எனத் தெரிவித்தார்.

மேலும் அவருக்கு தொண்டையில் டான்சில்ஸ் பிரச்சினையும் உள்ளது. வயோதிகம் காரணமாகவும் அவர் பேசுவது புரியாமல் இருக்கலாம் என்றார் பிரேமலதா.
கேப்டன் எப்போதுமே உண்மையை பேசுபவர். அவர் பல முறை பேசும்போது எனது பேச்சு கோர்வையாக இருக்காது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதுபோன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இல்லை. எதுவுமே தெரியாத நிலையில், எல்லாம் தெரிந்தது போன்று பேசும் தலைவர்கள்தான் உள்ளனர்.
எம்ஜிஆரையும் இப்படிதான் கூறினார்கள். குண்டடி பட்ட பிறகு எம்ஜிஆர் பேசுவது புரியவில்லை என்றார்கள். மேலும், காமராஜர் படிக்கவில்லை என்றும் கூறினார்கள். ஆனால், இன்றளவும் மக்கள் மனதிலே நிற்பவர்கள் எம்ஜிஆரும், காமராஜரும்தான் என்றார் பிரேமலதா.












Click it and Unblock the Notifications