சூடு பிடிக்கும் தேர்தல் களம்... பிரசாரத்தை நெல்லையில் இருந்து துவங்குகிறார் பிரேமலதா
சென்னை: தேமுதிக மகளிர் அணி தலைவி தனது முதல் தேர்தல் பிரசாரமான தேர்தல் அறிக்கை விளக்க கூட்டத்தை நாளை நெல்லையப்பர் கோவில் முன்பு இருந்து தொடங்குகிறார்
தமிழக அரசியலில் விஜயகாந்த் எந்த கூட்டணியில் இடம்பெறுவார் என்ற குழப்பம் சமீப காலமாக நிலவி வந்த சூழ்நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் கூட்டணி முடிவான கையொடு தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க தேமுதிக தயார் ஆகிவிட்டது. அதன்படி தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கையை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும் தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த பொதுக்கூட்டங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி, ஏப்ரல் 4-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற உள்ளது.
அதன்படி, பொதுக்கூட்டம் நடைபெறும் நாள், மாநகராட்சிகளின் விவரம் வருமாறு:-
25-ந்தேதி திருநெல்வேலி மாநகராட்சி, 26-ந் தேதி தூத்துக்குடி மாநகராட்சி, 27-ந் தேதி மதுரை மாநகராட்சி, 28-ந் தேதி தஞ்சாவூர் மாநகராட்சி, 29-ந் தேதி திருச்சி மாநகராட்சி, 30-ந் தேதி திண்டுக்கல் மாநகராட்சி, 31-ந் தேதி கோயம்புத்தூர் மாநகராட்சி.
ஏப்ரல் 1-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி, 2-ந் தேதி ஈரோடு மாநகராட்சி, 3-ந் தேதி சேலம் மாநகராட்சி, 4-ந் தேதி வேலூர் மாநகராட்சி ஆகிய இடங்களில் தினசரி மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications