ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை சென்னை வருகை
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2-ம்தேதி (வியாழக்கிழமை) சென்னை வருகிறார்.
சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாளை சென்னை வருகிறார். அவரது வருகையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் விமானப்படை விழா, அடையாறில் இந்திய பெண்கள் விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். நாளை இரவு 8.05 மணிக்கு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், இரவு 8:25 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை மறுநாள் காலை 8:35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் காலை புறப்பட்டு தாம்பரம் விமானப்படை விழாவில் கலந்துகொள்கிறார்.
அதனை தொடர்ந்து அடையாறில் இந்திய பெண்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றுகிறார். விழாவை முடித்து கொண்டு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
