சென்னை வந்தார் பிரணாப் முகர்ஜி.. தாம்பரம் விமானப்படைத் தள விழாவில் இன்று பங்கேற்பு
சென்னை தாம்பரம் விமானப் படை விழா மற்றும் அடையாறு இந்திய பெண்கள் சங்க நுாற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்துள்ளார்.
சென்னை: சென்னை தாம்பரம் விமானப் படை விழா மற்றும் அடையாறு இந்திய பெண்கள் சங்க நுாற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளவதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்துள்ளார்.
சென்னை வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். இதனையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தாம்பரம் விமானப் படை விழா
கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து இன்று காலை 8.35 மணிக்கு பிராணாப் முகர்ஜி புறப்பட்டு காலை 9 மணிக்கு தாம்பரம் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் 9:00 மணியில் இருந்து 11:20 மணி வரை, விமானப்படை வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்திய பெண்கள் சங்க நுாற்றாண்டு விழா
தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து 11.20 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு பிராணாப் முகர்ஜி அடையாறு வந்து சேருகிறார். அடையாறில், இந்திய பெண்கள் சங்க நுாற்றாண்டு விழாவில் பங்கேற்று விட்டு, மதியம் 1:15மணிக்கு அவர் டில்லி புறப்பட்டு செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருவதையொட்டி டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரிகள் கொண்ட 60 பேர் குழு சென்னை வந்துள்னர். மேலும அவர்கல் பாதுகாப்பு அதிகாரரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்
குடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு , கடந்த மூன்று நாட்களாக போலீசார் சென்னையில் தீவிர சோதனை நடந்தி வருகின்றனர். மேலும் தெற்கு மண்டல இணை ஆணையர் சங்கர் தலைமையில், 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications