டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு குடிநீர் - எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பெரியவர்கள் 30 மிலி முதல் 50 மிலி வரையும், 1 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 மிலி முதல் 10 மிலி வரையும் குடிக்க வேண்டும்.
சென்னை: நிலவேம்பு குடிநீர் இன்றைக்கு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் அருமருந்தாக உள்ளது. தமிழகம் முழுவதும், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் நிலவேம்பு குடிநீர் அளிக்கப்படுகிறது.
நிலவேம்பு பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோரைக் கிழக்கு போன்றவை சேர்ந்த பொடியாகும்.
5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மிலி தண்ணீரில் போட்டு 50 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அப்போதுதான் காய்ச்சலை குணப்படுத் துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும். அதன்பின் கசாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும்.

காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு
தலையில் நீர் கட்டுதல், தலைவலி, தும்மல், இருமல் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது. தைராய்டு, கர்ப்பப்பைக் கட்டிகளையும் நிலவேம்பு குணப்படுத்தும். காய்ச்சல் குறைந்த பிறகு கசாயம் குடிப்பதை நிறுத்திவிடலாம். அதன்பின் குடித்தாலும் தவறு ஒன்றும் இல்லை.

நிலவேம்பு குடிநீரின் பயன்கள்
நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதுடன் உடலில் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக் கிறது. சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. நிலவேம்பு பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பதும், நேரடியாக வாயில் போட்டு விழுங்குவதும் கூடாது. அதனால் எந்த பலனும் இல்லை. காய்ச்சலும் குணமாகாது.

காய்ச்சலை கட்டுப்படுத்தும் சுக்கு
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்பார்கள். நிலவேம்புக் குடிநீர் பொடியில் உள்ள சுக்கு வலிநீக்கியாக செயல்படுகிறது. சளி, காய்ச்சல் தொந்தரவுகளை நிக்கும். நிலவேம்புக் குடிநீர் பொடியில் மிளகுக்கும் ஓர் இடம் உண்டு. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துகளும் தயாமின், ரிபோபிளேவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன.

உடலுக்கு குளிர்ச்சி தரும்
நிலவேம்புக் குடிநீர் பொடியுடன் வெட்டிவேரும் சேர்க்கப்பட்டுள்ளது. இது குளிர்ச்சி தருவதுடன் நறுமணம் மற்றும் உற்சாகத்தைத் தரக்கூடியது. சந்தனமும் காய்ச்சலுக்கு அருமருந்தாகச் செயல்படுகிறது.

குளிர்ச்சி தரும் கிழங்குகள்
கோரைக் கிழங்கு சிறுநீர், வியர்வையைப் பெருக்குவதுடன் உடல் பருமனைக் குறைக்க உதவும். பேய்ப்புடல் காய்ச்சலைத் தணிக்கக்கூடியது. விலாமிச்சை வேர் மணமுள்ளது மட்டுமல்ல மிகவும் குளிர்ச்சி நிறைந்தது.

சர்க்கரையை கட்டுப்படுத்தும் நிலவேம்பு
சர்க்கரை நோயாளிகள் நிலவேம்பு கசாயத்தை குடித்தால், சர்க்கரையின் அளவு குறைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அது தவறான தகவல். சித்த மருந்து எப்போதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. சர்க்கரை நோயாளிகளும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். எந்த பாதிப்பும் இருக்காது. காய்ச்சல் குணமாகும். சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும் என்பது சித்த மருத்துவர்களின் அறிவுரையாகும்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications