தென்காசியிலும் “அசிங்கம்”.. மேலும் ஒரு பாதிரியார் கைது! பெண்களை சீண்டிய ஸ்டான்லி சிக்கியது எப்படி?
மகிழ்வண்ணநாதபுரத்தில் அமைந்து இருக்கும் தேவாலயத்தில் மதபோதகராக பணிபுரிந்து வந்த ஸ்டான்லி குமார்தான் இப்போது சிக்கியவர்.
தென்காசி: கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் தன்னை நாடி தேவாலயத்துக்கு வரும் பெண்கள், கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆலங்குளத்தில் மேலும் ஒரு பாதிரியார் பாலியல் வழக்கில் கைதாகி இருக்கிறார்.
கன்னியாகுமரி தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் பெனெடிக் ஆண்டோ. கடந்த சில நாட்களுக்கு முன் அவரை தாக்கிய மர்ம நபர்கள் லேப்டாப்பை திருடி சென்றனர்.
திருடப்பட்டதாக கூறப்பட்ட அந்த லேப்டாப்பில் பல அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் வீடியோக்களும் இருந்துள்ளன. அதை யாரோ சமூக வலைதளங்களில் வெளியிடவே வசமாக சிக்கினார் பாதிரியார் பென்னடிக்.

பெண்களுடன் பேச்சு
தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பேசி அவர்களின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார் பென்னடிக். அதன் பின்னர் அவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலமாக பேசத் தொடங்கிய அவர், நாளாக நாளாக பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக வீடியோ கால் மூலமாக பெண்களிடம் தொடர்பில் இருந்திருக்கிறார் பெனெடிக் ஆண்டோ.

கல்லூரி மாணவிகள்
பாதிரியார் பென்னடிக் பெரும்பாலும் கல்லூரி மாணவிகளுடன் இவ்வாறு பேசி இருக்கிறார். தனது பேச்சில் மயங்கிய சில பெண்களிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதையும் பாதிரியார் ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்து வைத்து உள்ளார் ஆண்டோ. அதேபோல் பெண்களிடம் பாதிரியார் நேரிலும் தவறாக நடந்துகொண்டதாகவும், ஆபாச வீடியோக்களை காட்டி பணம் கேட்பதாகவும் புகார்கள் எழுந்தன.

நர்சிங் மாணவி புகார்
அவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் அவர் கேட்ட பணத்தை கொடுத்து உள்ளார்கள். இந்த நிலையில் நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் பென்னடிக் ஆண்டோ மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். புகாரை பதிவு செய்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே ஆபாச வீடியோக்கள் கசிந்ததால் அவர் தலைமறைவானார்.

புதிய மதபோதகர்
பாதிரியாராக பணிபுரிந்து வந்த தேவாலயத்தில் இருந்தும் பென்னடிக் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு மாற்றாக புதிய மதபோதகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று பாதிரியார் பென்னடிக் ஆண்டோவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஒரு பாதிரியார் கைது
இந்த நிலையில்தான், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மேலும் ஒரு பாதிரியார் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். மகிழ்வண்ணநாதபுரத்தில் அமைந்து இருக்கும் தேவாலயத்தில் மதபோதகராக பணிபுரிந்து வந்த ஸ்டான்லி குமார்தான் இப்போது சிக்கியவர். இவர் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக டி.எஸ்.பி.யிடம் சபை மக்களே புகாரளித்து உள்ளார்கள். அதன் அடிப்படையில் இவர் கைதாகி உள்ளார். இவரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
