பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் பாதிரியாருக்கு ஜாமீன்
நெல்லை: நெல்லையில் பள்ளி மாணவியை பலாத்காரப்படுத்தி கர்ப்பமாக்கிய வழக்கில் பாதிரியாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
நெல்லை பேட்டையில் புனித அந்தோணியர் ஆலயம் உள்ளது. இங்கு பங்குத் தந்தையாக இருப்பவர் செல்வன். இவர் ஆலய வாளகத்தில் உள்ள பங்களாவில் தங்கி இருந்தார்.
நெல்லை, பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரது மகள் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஆலயத்துக்கு சென்று வந்தபோது பாதிரியாருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் மாணவியை பாதிரியார் தனது பங்களாவுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே பாதிரியாரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து நெல்லை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் செல்வன், கருக்கலைப்பு செய்ததாக டாக்டர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் கருக்கலைப்பு செய்து புதைக்கப்பட்ட சிசுவின் உடலையும் தோண்டி பரிசோதனை செய்தனர். இந்த நிலையில் பாதிரியார் செல்வன் தேனி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
சம்பவம் நடந்து 15 நாள் ஆகிவிட்டதால் பாதிரியார் ஜாமீன் கேட்டு நெல்லை மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி பொறுப்பு நந்தகுமார், தினமும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications