பிளீச்சிங் பவுடர் உட்கொண்டு ஆயுள்தண்டனைக் கைதி தற்கொலை.. புழல் சிறையில் பரபரப்பு
பிளீச்சிங் பவுடர் தின்று ஆயுள்தண்டனைக் கைதி புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இது சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: புழல் சிறையில் ஆயுள்தண்டனைக் கைதி ஒருவர் பிளீச்சிங் பவுடரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆயுள் தண்டனைக் கைதியான அந்தோணி ராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று பிளீச்சிங் பவுடரை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட போலீசார், அந்தோணிராஜை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அந்தோணி ராஜ் உயிரிழந்தார். இதனால் சிறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புழல் சிறையில் தொடர்ந்து கைதிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மின்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறி ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மரணம் அடைந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications