தனியார் நிறுவனங்களின் வாயில் "பால்" ஊற்றிய ராஜேந்திர பாலாஜி.. விற்பனை 25% அவுட்!
தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரமாரியாக குற்றம்சாட்டியதை தொடர்ந்து சென்னையில் தனியார் பால் விற்பனை 25 சதவீதம் சரிந்துள்ளது.
சென்னை: சென்னையில் தனியார் பால் விற்பனை 25 சதவீதம் சரிந்துள்ளது. தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியதை தொடர்ந்து பால் விற்பனை குறைந்துள்ளதாக பால் முகவர்கள் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில நாட்களாக தனியார் பால் நிறுவனங்களை வளைத்து வளைத்து குற்றம்சாட்டி வருகிறார். தனியர் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக கூறிய அவர், இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக குண்டை தூக்கிப்போட்டார்.
தனியார் பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறிய அவர், இதனால் தனியார் பால் பாக்கெட்டுகள் 10 நாட்கள் வரை கெடாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

அமைச்சரின் குற்றச்சாட்டு
தனியார் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குவதாகவும் அவர் தெரிவித்தார். கமிஷனுக்காக பால் முகவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தனியார் பால் சோதனை
தனியார் பால் புனேவுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆய்வு முடிவுக்குப் பிறகு கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பால் விற்பனை சரிவு
இந்நிலையில் சென்னையில் தனியார் பால் விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளதாக பால்முகவர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் கூறியதே இதற்கு காரணம் என்றும் பால் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பால் நிறுவனங்களுக்கு இழப்பு
இதனால் தனியார் பால் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கு அமைச்சர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என்றும் பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications