ரோட்டோரம் குழந்தை அழுதால் கவனம் – தனியார் பள்ளியின் நோட்டீஸால் பரபரப்பு!
சென்னை: சென்னையில் தனியார் பள்ளியின் மூலமாக பெற்றோரிடம் பரவி வரும் ஒரு நோட்டீஸ் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில் இடம் பெற்றிருக்கும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று திரும்பும் உங்கள் மகள்களிடமோ, அல்லது பணிக்கு செல்லும் மகள்களிடமோ இந்த தகவலை கூறிவிடுங்கள்.

குழந்தை அழுதால்:
சாலையோரமாக எந்த பகுதியிலாவது குழந்தை ஒன்று அழுதபடி கண்ணை கசக்கி கொண்டு நின்றிருந்தால் கண்டு கொள்ளாமல் வந்துவிட வேண்டும்.
கடத்தல் கும்பல்:
அப்படி செய்யாமல் அந்த குழந்தையிடம் சென்று பேச்சு கொடுத்தால் அது குறிப்பிட்ட முகவரியில் கொண்டு விடச்சொல்லும். இதன்படி அக்குழந்தையை அழைத்துச் செல்பவர்கள் கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொள்வார்கள்.
பாலியல் வன்முறை கும்பல்:
அக்கும்பலை சேர்ந்தவர்கள் கையில் சிக்கும் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி விபசாரத்திலும் ஈடுபடுத்தி விடுவார்கள். எனவே உஷாராக இருக்குமாறு உங்கள் மகள்களை அறிவுறுத்துங்கள் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் அதிர்ச்சி:
அப்பள்ளியின் முதல்வர் கையெழுத்துடன் பெற்றோர்களுக்கு இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
நாங்கள் கொடுக்கவில்லை:
இதுபற்றி சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் இருக்கும் பகுதி துணை கமிஷனரான பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது,இதுபோன்ற எந்த ஒரு தகவலையும் நாங்கள் பள்ளிக்கு கொடுக்கவில்லை.
நோட்டீஸ் விநியோகம்:
பள்ளி நிர்வாகத்துக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி ஒருவர் ஆக்ராவில் பணியாற்றுவதாகவும், அவர் கூறிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நோட்டீஸ் வினியோகிக்ககப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பீதியடைய வேண்டாம்:
இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகிறோம். எனவே பெற்றோர்களை தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications