மத்திய அமைச்சர்களை தமிழகத்துக்குள் வர விடாமல் தடுப்போம்- 12 தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
கோவை: காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசைக் கலந்து கொள்ள விடாமல் தடுக்கத் தவறிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தமிழகத்துக்குள் வர விடாமல் தடுத்துப் போராட்டம் நடத்தப்படும் என்று 12 தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
நவம்பர் 12ம் தேதி நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இதில் 12 தமிழ்அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
இக்கூட்டம் மதிமுக மாவட்டச் செயலாளர் மோகன் குமார் தலைமையில் நடந்தது. அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நவம்பர் 12ம் தேதியன்று கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வர்த்தர்களிடன் ஆதரவைக் கோருவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 12ம் தேதி அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும். இதில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள்.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் யாரையும் நுழைய விடாமல் தடுத்துப் போராட்டமும் நடத்தப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications